பட்டத்து யானை
மல்லாந்து கிடந்த பிணங்கள் மிகவும் சொற்பம். எல்லாமே குப்புற, மண்ணைக் கவ்வியே கிடந்தன!
நாலாயிரம் வீரர்களைப் பறிகொடுத்த மயிலப்பன், குண்டாற்றுக் காடுகளுக்குள் மறைந்து ஓடும்போது துடித்தானே… அந்தத் துடிப்பு, இன்று அடங்கியது. மயிலப்பனின் படை கொட்டிய ரத்தத்தை, கோட்டையும் குண்டாறும் குடிக்கவில்லை… பூசிக்கொண்டு வெகுகாலம் காத்திருந்தன. எவனாவது ஒரு மாவீரனை இந்த மண் பெற்றெடுக்கும்; அவன் அடக்குவான் நம் தாகத்தை!’ எனப் பொறுமை காத்தன. பழி தீர்த்தது, ரணசிங்கத்தின் கருஞ்சேனை!
– வேல ராமமூர்த்தி
Reviews
There are no reviews yet.