புனா ஒப்பந்தம் : ஒரு சோகக் கதை
தொ.ப வின் எழுத்தென்பது எளிய மக்களை நேரடியாக அணுகக்கூடியது. எளிமையாக எடுத்துரைப்பது.
சாதி, சமயம், பண்பாடு போன்றவற்றின் பல கூறுகளைத் தொ.ப தொட்டிருப்பார். அந்த வகைப்பாட்டில் ‘புனா ஒப்பந்தம்’ ஒரு சோகக் கதை கட்டுரை அத்தனை நேர்த்தியாகத் தனது சொந்த அனுபவத்திலிருந்து தொடங்கி சுதந்திர இந்தியாவுக்கும் முன் கொண்டு வந்து விட்டிருப்பார். அவற்றைப் படித்தபிறகு நாம் சமகாலப் போக்கோடு இந்தியாவையும், காந்தியையும், அம்பேத்கரையும் பொருத்திப் பார்த்துத் தேட ஆரம்பிப்போம்.
‘இரட்டை வாக்குரிமையே தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்புரிமை’ எனப் படிக்கும்போது, அதன் தேவை குறித்தும் அதற்காக உழைத்த டாக்டர். அம்பேத்கர் குறித்தும் வருந்தவும் சிந்திக்கவும் வைக்க நிறைய காட்சிகள் உண்டு. நாட்டின் ஆங்காங்கே தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வாக்கு வன்முறைகளையும் தேர்தல் கால படுகொலைகளையும் நாம் கணக்கில் கொண்டால் எண்ணிலடங்காதவை.
இந்த இரட்டை வாக்குரிமைக்கான ஒப்பந்தத்திற்குப் பிறகு அம்பேத்கர் விடுகிற அறிக்கைகளாகட்டும் மனமொப்பாத நிலையில் சமாதானமாகக் கையெழுத்திட்டு நொந்துபோய் விட்ட அறிக்கைகளாகட்டும் அத்தனையும் வலி நிறைந்த வரலாற்று ஆவணம்.
பெற்ற பிள்ளையின் எதிர்காலம்குறித்து ஒரு தந்தை சிந்திக்கிற நிலையிலிருந்து இந்தியாவின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களுக்காகச் சிந்தித்ததை காகிதத்தைப் புரட்டிப் படித்துவிட்டு கடந்து போகிற மனநிலையைத் தரவில்லை.
இறுதியில் தனித்தொகுதிக்கான ஒப்பந்தம் மட்டும் பிரிட்டிஷாரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் ஒருபுறமிருக்க., இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட சூழ்நிலைகுறித்து சில ஆண்டுக்குப் பிறகு அம்பேத்கர் சிலவற்றை எழுதியுள்ளதாகப் படிக்கும்போது சட்டென எனக்குத் தோன்றியது இதுதான். அம்பேத்கர் காந்தியின் பேரிலான கரிசனத்தில் ஒத்துப்போகாமல் இருந்திருந்தால் கோட்சே காந்தியை சுட்டிருக்கவேத் தேவையில்லை. கோட்சே போன்ற சனாதனி அல்ல அம்பேத்கர். ஆனால் காந்தி சனாதனியா என நீங்கள் கேட்டால் புனா ஒப்பந்த அரசியல் பின்னணியை நுட்பமாக ஆராய்பவர்களுக்குத் தெரியும்.
லாப நோக்கில்லா இச்சிறு வெளியீடு ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும், அம்பேத்கரோடு களத்தில் நின்றவர்களும் எதிரணியில் நின்றவர்களும் யார் யாரென அறியவும், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு ஓர் உபயோகமுள்ள எளிய மொழியிலான கட்டுரையாகவும் அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லத் தூண்டுகோலாகவும் இருக்குமென நம்புகிறோம்.
Manimaran Anbudan –
எது ஒன்றும் இங்கே நமக்கு எளிதாக கிடைத்துவிடுவதி ல்லை, இப்போது நாம் அனுபவிக்கும் உரிமைகள் கூட நமது முன்னோர்களால் போராடியும், எதிராளிகளின் துரோகங்களையும், அவதூறுகளையும் சுமந்து தான் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சூழலும் பட்ட பாடுகளையும் இந் சியம் என்ற நூலில் தொ.பா ஒரு அத்தியாயத்தில் விளக்கி இருப்பார் அதனை தனி புத்தகமாக குறைந்த விலையில் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அகழி பதிப்பகமும் என்ட்லெஸ் ரீடர்ஸ் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டிருக்கறொர்கள்.