
Azhakin asaivu

சாதி என்பது குரூரமான யதார்த்தம்

Other Specifications
23 in stock
தமிழ்ப் பேராசிரியராகிய தொ.ப. அவர்களின் பார்வைக் கூர்மையில் புறநானூறு முதல் புதுக்கவிதை வரை, தொல்காப்பியத்திலிருந்து தற்காலப் பழகுதமிழ் வரை துலங்குவதை விதந்து சொல்லவேண்டியதில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவினர் ஒரு காலத்தில் சமயக் குருமார்களாக இருந்த வரலாற்றுச் சுவடுகள், மொட்டையடித்தல் என்னும் பௌத்த வழி வழக்கத்தின் தொடர்ச்சி, சமண நியாய பரிபாலனப் பெரும்பள்ளி பகவதி அம்மன் கோயிலாக வழிபடப்படுதல், வைணவ வழிபாட்டில் வைதிகத் ‘தூய்மை’ கடந்த வெகுமக்கள் பண்பாட்டு ஏற்பு, வள்ளி மணாளன் முருகன் பெருஞ்சமயச் சார்புற்றுச் சண்முகன், கார்த்திகேயன், சுப்பிரமணியன் என்றெல்லாம் ஆன காலத்தில் தெய்வானை சேர்ந்த கதை, துலுக்க நாச்சியார் அழகரின் காதலியான கதை, தாய்த்தெய்வ வழிபாட்டின் செல்வாக்குக் கத்தோலிக்கத் தேவமாதாவிடம் புலப்பட்ட வரலாறு, தைப்பூசத்தில் தமிழ்ப் புத்தாண்டு காணுதல் எனச் சாதிகள், சமயங்கள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் என்னும் பண்பாட்டின் பொதுப் பெரும் போக்குகள் ஒருபுறம்.
Reviews
There are no reviews yet.