ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான ஜி. நாகராஜனின் இலக்கிய ஆளுமையைத் துல்லியமாக அறிய உதவும் தொகுப்பு இது. ‘ஜி நாகராஜன் படைப்புகள்’ (காலச்சுவடு பதிப்பகம், 1997) தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நாளை மற்றுமொரு நாளே’ (நாவல்), ‘குறத்தி முடுக்கு’ (குறுநாவல்), 33 சிறுகதைகள், உரைநடைப் பகுதிகளுடன், மேலும் இரண்டு சிறுகதைகள், மூன்று கவிதகைள், இலக்கிய அனுபவக் கட்டுரை, வாசகர் கடிதங்கள், சு. ரா.வுக்கு நாகராஜன் எழுதிய நான்கு கடிதங்கள் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் (சிறுகதைகள், ஒரு நாவல்மற்றும் குறிப்புகள்) அடங்கிய முழுமையான தொகுப்பு.
ஆனந்த் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை. நெருங்கினால் பொருள் செறிவு காரணமாகப் பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சுழிகளையும் ஆழங்களையும் கொண்டிருப்பது போல ஆனந்தின் கவிதை ஓர் அனுபவத்தின் அக ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அதிகம் உணர்ச்சிவசப்படாத சொற்களில் எழுதப்பட்டவையாகத் தெரியும் வரிகளில் மனதின் பல நிறங்களையும் பார்க்க முடியும். அறிவு சார்ந்த தொனியில் கட்டப்பட்டவைபோலக் காட்சியளிக்கும் கவிதைகளில் புலன்களின் தீவிரத்தை உணர முடியும். அகம் புறம் என்ற பேதமில்லாத ஒரு புள்ளியிலிருந்து மனதின் களியாட்டமாக நிகழ்பவை ஆனந்தின் கவிதைகள். அவருடைய பிரத்தியேகப் பார்வையே இந்தக் களியாட்டத்தின் விதிகளை உருவாக்குகிறது.
Anand’s poems represent the gaiety of the mind without any feelings of being inside or outside.
Reviews
There are no reviews yet.