மும்மூர்த்திகள்
ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன்
ஓர் எழுத்தாளர் என்பவர் எப்போதும் யாராலும் தீர்க்க முடியாத ஒரு புதிர். அதிலும் தீவிரமான இலக்கிய எழுத்தாளர்களைப் புரிந்துகொள்வது சவாலானது. பிரதிகளை வாசிப்பதன் மூலம் அவர்களை ஓரளவுக்கு அனுமானிக்கலாம் என்பது சரிதான். ஆனால் நேர்காணல்களே அவர்களைப் புரிந்துகொள்வதில் பெரிய திறப்பாக அமைகின்றன. அந்தப் புரிதலோடு அவர்கள் படைப்புகளை மீள அணுகும்போது அவை வேறொரு பரிமாணம் கொள்கின்றன.
ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் ஆகியோரோடு சரவணகார்த்திகேயன் நிகழ்த்தியிருக்கும் இந்த விரிவான நேர்காணல்கள், தமிழின் முக்கியமான படைப்பாளர்களான இந்த மூவரையும் நமக்கு நெருக்கமானவர்களாக மாற்றிக்காட்டும் மாயத்தை நிகழ்த்துகிறது. கூடவே, தமிழ் இலக்கிய உலகின் இதயத்தை உருத்திரட்டி எடுத்துவந்து நம் கண்முன் நிறுத்துகிறது. ஓர் எழுத்தாளராகச் சிந்திப்பது, இயங்குவது, வாழ்வது என்றால் என்னவென்பதை நுட்பமாக வெளிக்கொண்டுவரும் குறிப்பிடத் தக்க நூல் என்று இதனைச் சொல்ல முடியும்Language: தமிழ்
ISBN: 9789351350354
Published on: 2020
Book Format: Paperback
Category: நேர்காணல்
Subject: இலக்கியம்.
ஓர் இலக்கிய நேர்காணல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான புதிய இலக்கணத்தை இந்நூலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் நவீன தமிழ்ப் படைப்புலகின் முக்கியமான முகமாகத் திகழும் சி. சரவணகார்த்திகேயன்.
Reviews
There are no reviews yet.