தமிழில்: B.R.மகாதேவன் பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது தொடர்பாக இந்து தரப்பு, முஸ்லிம் தரப்பு என இரண்டுக்குமான வாதங்களை மிக விரிவாக, மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர். காந்தி, சாவர்க்கர், ஜின்னா ஆகியோரின் கோணம், பிரிவினை தொடர்பான உலக நாடுகளின் வரலாறு என அனைத்துக் கோணங்களும் விவாதிக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு ஆழமாகவும் எந்த அளவுக்கு நடுநிலையோடும் அண்ணல் இந்நூலை எழுதியிருக்கிறார் என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளமுடியும். விரிவான ஆய்வுக்குப் பிறகு, பிரிவினைதான் ஒரே தீர்வு எனும் முடிவுக்குதான் அம்பேத்கரும் வந்து சேர்கிறார். அந்தப் பிரிவினையை எவ்வாறு நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது குறித்து அவர் முன்வைக்கும் பார்வை தனித்துவமானது. ஆனால் அவர் பார்வையை ஒருவரும் கணக்கில் கொள்ளவில்லை. அதன்பின் நடந்தவை நமக்குத் தெரியும். 1940களில் வெளிவந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்பேத்கரின் இந்நூலை இன்றைய அரசியல் சூழலில் நாம் வாசிப்பதும் விவாதிப்பதும் முக்கியம்.
Pakistan India Pirivinai / பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை
Brand :
- Author: டாக்டர் அம்பேத்கர்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
- No. of pages: 552
Other Specifications
- Language: தமிழ்
- ISBN: 9789390958139
- Published on: 2022
- Book Format: Paperback
Vendor Information
- Address:
- No ratings found yet!
Reviews
There are no reviews yet.